திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திருவண்ணாமலை காந்தி சிலை அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “திமுக இந்து விரோதி என்ற ஒரு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். யாருடைய நம்பிக்கைக்கு எதிராகவும் திமுக இருப்பதில்லை. அமையப்போகும் திமுக அரசு அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும். இந்தி மொழிக்கும் திமுக என்றும் விரோதியாக இருந்ததில்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.