தமிழ்நாடு

tamil nadu

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு!

By

Published : Apr 12, 2020, 1:42 PM IST

திருவண்ணாமலை: வனப்பகுதியிலிருந்து நீர் தேடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

deer recover alive in tiruvannamalai district
deer recover alive in tiruvannamalai district

திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலுள்ள மான்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நீர் தேடிவருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், மேல்செங்கம் வனப்பகுதியிலிருந்து, புள்ளிமான் ஒன்று நீரைத் தேடி வெங்கடேசன் என்பவரது விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

இதுகுறித்து வெங்கடேசன் வனத்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவலளித்தார். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்த புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்களுக்கு நீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மான் குட்டியை விரட்டிய நாய்கள்: மீட்ட இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details