கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலம் சோடா கடை அருகே உள்ள இந்தியன் வங்கி கிளையில் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் பணப்பரிவர்த்தனை செய்ய வந்தனர்.
காற்றில் பறந்த தகுந்த இடைவெளி - வங்கி முன் அலைபோதும் கூட்டம்!
திருவண்ணாமலை: தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், வங்கி முன் அலைமோதும் கூட்டத்தால் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல், வங்கி முன் அலைபோதும் கூட்டம்: கரோனா பரவும் அபாயம்!
அதில் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் இன்றியும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் கூட்டமாக வங்கி முன்பாக நின்றனர். இது குறித்து வங்கி அலுவலர்களும், பொது மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் செய்யாமல் இருந்தது வருத்தத்தை அளித்தது. வங்கி ஊழியர்களின் அலட்சிய நடவடிக்கையால், பொது மக்கள் பலருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க...இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!