விவசாயிகள் முற்றுகையிட்ட வீடியோ திருவண்ணாமலை:படூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம் கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்தத் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து விவசாயிகளுக்கு தேவையான விதைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து நேற்று காலை முதல் மணிலா விதைகள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசு அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை முதலே துணை வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் மணிலா விதைகளை வாங்க விவசாயிகள் ஒன்று கூடினர். ஆனால் வேளாண்மை மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விவசாயிகளுக்கு மணிலா விதைகளை வழங்காமல் பல்வேறு காரனங்களை கூறி காலம் கடத்தி வந்துள்ளனர்.
அது மட்டும்மல்லது நேற்று முன்தினம் மாலை முழு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 300 மணிலா விதை மூட்டைகள் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வந்துள்ளது. இதனை முறைப்படி விவசாயிகளுக்கு வழங்காமல் திமுக கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 70 மூட்டைகள் மணிலா விதைகளை அரசு அதிகாரிகள் வழங்கினர் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேலும், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் மணிலா விதைகளை வழங்காமல் அலைக்கழித்தனர் இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அரசு ஊழியர்களை கண்டித்து துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மணிலா விதைகளை வழங்குமாறு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த பெரியகுளம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்துதான் மேல்படூர், கீழ்படூர், வாய்விடாந்தாங்கல், கல்லறைபாடி, மஷார், நயம்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார 25 கிராமங்களில் இருந்து விவசாயிகள் விதைகள் மற்றும் மருந்துகளைப் பெற்றுச்செல்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "வேளாண்மை மையத்தில் காலை முதல் மாலை வரை காத்திருந்தும் தங்களுக்கு மணிலா விதைகள் வழங்கவில்லை எனவும், ஆளும் கட்சியினருக்கு மட்டும் விதைகள் வழங்கியுள்ளனர் தற்போது பருவ மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் மணிலா விதைகளை விதைத்தால் நல்ல மகசூல் பெற முடியும் ஆனால் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் மணிலா விதைகளை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சிய பொக்குடன் செயல்படுவதால் தமிழக முதலமைச்சர் இது குறித்து விசாரிக்க வேண்டும் மேலும் விவசாயிகளை காக்க வேண்டும் எனவும், உடனடியாக மணிலா விதைகள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க :"தக்காளி ரூ.150 விற்றாலும் நாங்கள் கடனாளி தான்" - கோவை விவசாயி வேதனை.. சிறப்பு தொகுப்பு!