தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு அலுவலர்போல் கையெழுத்திட்டு மோசடி - ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலைவீச்சு

அரசு அலுவலர்கள் போல் கையெழுத்திட்டு, போலி ஆவணம் தயாரித்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு
Etv Bharat ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு

By

Published : Sep 11, 2022, 9:15 PM IST

திருவண்ணாமலை: ஆரணி வெள்ளேரி கிராமத்திலுள்ள ஆர்.பி.ஜி கார்டன் என்ற பெயரில் 2014ஆம் ஆண்டில் 140 வீட்டு மனைகள் விற்பனை செய்வதாக விளம்பரப்பலகை நிறுவப்பட்டது. மேலும், அரசு உத்தரவு மற்றும் அங்கீகாரம் இல்லாமல் நன்செய் விளை நிலங்களை விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் ஆரணியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அரசு என்பவர் நன்செய் நிலங்களை வீட்டு மனைப்பிரிவு போட்டதால், இந்த வீட்டுமனைகளை விற்பனை
செய்யமுடியவில்லை.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகர்ப்புற வீட்டுமனை அங்கீகாரம் இணை இயக்குநர் ஆகியோரின் கையெழுத்திட்டு போலியாக ஆவணங்கள் தயாரித்து, ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 9 வீட்டு மனைகளைப் பதிவு செய்தார்.

இந்நிலையில் ஆரணி டவுன் பகுதியைச்சேர்ந்த வினோத் குமார் என்பவர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் போலி ஆவணம் தயாரித்து வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார். மேலும், புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் விசாரணையில் ஊர்ஜிதமானது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஆரணியைச் சேர்ந்த அரசு மற்றும் தணிகைவேல் ஆகியோர் மோசடி மற்றும் போலி அரசு ஆவணங்களை தயாரித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் அதிபர் அரசு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை வலைவீசித்தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சாலையைக் கடக்க முயன்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details