தமிழ்நாடு

tamil nadu

"திருவண்ணாமலை கோயில் தீபத்திருவிழா" - 2,615 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு!

By

Published : Dec 5, 2019, 7:24 PM IST

திருவண்ணாமலை: புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்களுக்காக 2 ஆயிரத்து 615 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா
சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கப்படுகிறது. அதற்கு அடுத்தநாள் 11ஆம் தேதி, பெளர்ணமி கிரிவலமும் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தரும் காரணத்தினால், பக்தர்களின் வசதிக்காக 09.12.19 அன்றிலிருந்து 12.12.19 வரை 2 ஆயிரத்து 615 சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னையிலிருந்து சுமார் 500 பேருந்துகளும், தாம்பரம், காஞ்சிபுரம், ஆரணி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்து 112 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் 5000க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பேருந்துகள் கும்பகோணம், மதுரை, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படுவதால் பக்தர்கள், இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முக்தியடைந்த தருமபுரம் ஆதீனம் - மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details