திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி நோக்கி இன்று இருசக்கர வாகனத்தில் சென்னையைச் சேர்ந்த இருவர் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் வண்டியை மிகவும் விரைவாகச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மிகவும் வேகமாகச் சென்றதால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எதிரே உள்ள புளியமரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.
இருசக்கர வாகன விபத்து: சம்பவ இடத்திலேயே இருவர் பலி!
திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்தம் அதிகம் வெளியேறியதன் காரணமாக இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக இறந்தவர்களின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பெருமாள் என்பது தெரியவந்தது. இந்நிலையில் பலியானவர்களில் ஒருவருக்கு கைக்குழந்தை ஒன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.