தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 3, 2021, 11:08 AM IST

ETV Bharat / state

நண்பனை ஓட ஓட வெட்டிக் கொன்றவர் காவல் நிலையத்தில் சரண்!

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக நண்பனை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

murder  murder issue  thiruvallur murder issue  thiruvallur news  thiruvallur latest news  youth stabbed his friend  ஓட ஓட வெட்டிக் கொலை  வெட்டிக் கொலை  நண்பனை வெட்டிக் கொலை  திருவள்ளூரில் நண்பனை வெட்டிக் கொலை  கொலை வழக்கு  கொலை செய்திகள்  குற்றச் செய்திகள்
கொலை வழக்கு

திருவள்ளூர்: புல்லரம்பாக்கம் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (31), காக்களுர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் முருகன் நேற்று (அக்டோபர் 2) இரவு வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது அவருடன் பணிபுரியும் அதே பகுதியைச் சேர்ந்த, முருகனின் நண்பர் அப்பு என்கிற சுபாஷ் சந்திரபோஸ் (30), முருகனைத் தனியாக அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தார். அதுசமயம், சுபாஷ் சந்திரபோஸ் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால், திடீரென முருகனின் கழுத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

ஓட ஓட வெட்டிக் கொலை

இதனால் காயமடைந்த முருகன், தப்ப முயன்றபோதும், சுபாஷ் சந்திரபோஸ், முருகனை ஓட ஓட விரட்டிச் சென்று தலை, கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சுபாஷ் சந்திரபோஸ் புல்லரம்பாக்கம் B8 காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பின்னர் இக்காவல் நிலையத்தின் முக்கியக் கிளையான B2 காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற B2 தாலுகா காவல் ஆய்வாளர் நாகலிங்கம், சில காவலர்கள், முருகனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சரணடைந்த சுபாஷ் சந்திரபோஸிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முருகனுக்கும், சுபாஷ் சந்திரபோசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகவும், இதனால் முருகனை வெட்டிப் படுகொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 10 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: லாரியுடன் பறிமுதல்செய்த காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details