தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரிக்கரைகளில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு - ஆட்சியர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிக்கரைகளில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் மரம்நடும் நிகழ்ச்சி

By

Published : Jun 5, 2019, 9:17 PM IST

உலகச் சுற்றுச்சுழல் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அலுவலகத்தில் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"தமிழ்நாடு அரசால் மரக்கன்றுகள் வளர்பதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 15 தொழிற்சாலைகளில் 1500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இம்மாதம் இறுதிக்குள் மூன்றாயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஊரக வளர்ச்சி துறை மூலமாக நான்கு லட்சம் மரக்கன்றுகளும், பொதுப்பணித் துறை சார்பாக ஏரிக்கரைகளில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் மரம்நடும் நிகழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details