திருத்தணி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் ஆறு மாத காலமாகக் குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருப்பதி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை, திருவள்ளூர், ஸ்ரீ பெரும்புதூர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாக இது உள்ளதால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கவில்லை: பொதுமக்கள் மறியல்!
திருவள்ளூர்: திருத்தணி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கவில்லை: பொதுமக்கள் மறியல்!
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கனகம்மாசத்திரம் காவல்துறையினர், பொதுமக்கள் இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.