திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 170 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை வழங்கும் விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.
இதில் கிராம பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் பள்ளிக்குத் தேவையான பீரோ, மின்விசிறி, பாய், நாற்காலி, தண்ணீர், இருக்கைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்கள். மேலும் வரும் கல்வி ஆண்டில் எல்.கே.ஜி வகுப்பிற்கு 20 மாணவர்களுக்கான சேர்க்கையும் நடந்தது.
அரசு நடுநிலைப்பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்!
ஊர்வலம் புட்லூர் ரயில் நிலையம் அருகே தொடங்கி கிராமங்களின் வழியே நடந்து உற்சாகத்துடன் பள்ளி வளாகம் வந்தடைந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ராமதாஸ் முன்னிலை வகித்தார் இதில் பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.