தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 19, 2021, 8:10 PM IST

ETV Bharat / state

தடுப்பூசி செலுத்துவதில் இலக்கு நிர்ணயம் கூடாது - செவிலியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட செவிலியர்கள், கூட்டமைப்பின் தலைவர் தனலட்சுமி தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் (Protest) ஈடுபட்டனர்.

செவிலியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
செவிலியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளுர்: தமிழ்நாடு அரசு கிராம, பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பைச் சேர்ந்த செவிலியர்கள் இன்று (நவ.19) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு தலைவர் தனலட்சுமி, "மெகா கரோனா சிறப்பு முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை நடத்த வேண்டும். கரோனா முகாமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.

தடுப்பூசி (Covid 19 vaccine) செலுத்துவதில் இலக்கு நிர்ணயம் செய்யக்கூடாது. வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதால் தடுப்பூசியின் வீரியம் குறைய வாய்ப்பு உள்ளதால் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்த வேண்டும்.

செவிலியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கிராம துணை சுகாதார நிலையங்களில் துணை சுகாதார செவிலியர்கள் மட்டுமே பணி அமர்த்த வேண்டும். ஆண் பணியாளர்களுக்கு சமமான கிரேட் 1 ஊதியம் பெண் செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும்.

முதலமைச்சர் அறிவித்த ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிச்சுமையால் தாய்சேய் நல பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. 12 மணி நேர பணிச்சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் (Tiruvallur collector) ஆல்பி ஜான் வர்கீஸிடன் கூட்டமைப்பு நிர்வாகிகள் வழங்கினர்.

இதையும் படிங்க: 580 ஆண்டுகளுக்குப் பின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம்

ABOUT THE AUTHOR

...view details