திருவள்ளூரில் புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமாவாசை தோறும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவ விழா நடைபெற்றது.
வீரராக பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் - திராள பக்தர்கள் பங்கேற்பு
திருவள்ளூர்: ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வீரராக பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்
இதில், உற்சவர் வீரராகவ பெருமாள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தெப்பத் திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். இதனால், திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.