திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் போன்ற குட்கா பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருத்தணியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை: இருவர் கைது
திருவள்ளூர்: திருத்தணியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
குட்கா பொருட்கள்
இதையடுத்து நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில், இரண்டு பேர் சட்டவிரோதமாக கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. ஒரு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.