திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகையையொட்டி ஜூலை 26ஆம் தேதி தொடங்கும் தெப்பத்திருவிழா 28ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு பருவ மழை இல்லாததால் கோயில் குளத்தில் தண்ணீர் மிக குறைந்த அளவில் உள்ளது. இதனால் தண்ணீரில் தெப்பம் கட்டுவதற்கும் தெப்பத்திருவிழா நடத்துவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருத்தணி முருகனுக்கே ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம்
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஜூலை 26, 28ஆம் தேதிவரை நடைபெறும் தெப்பத் திருவிழாவிற்காக குலத்தில் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
திருத்தணி
மேலும், நேற்று வரை திருத்தணியில் போதிய மழை பெய்யாததால் குதெப்பம் கட்டுவதற்கு ட்ராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திருக்குளத்தில் விடுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு டிராக்டர் தண்ணீர் 600 ரூபாய் வீதம் திருக்குளத்திற்கு விடுவது என தீர்மானித்துக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 75 டாக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தை