தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணவப் பேச்சு பேசிவரும் திமுக தலைவருக்கு சம்மட்டியடி கொடுப்போம் -முதல்வர்

திருவள்ளூர் : இந்த தேர்தலோடு ஸ்டாலின் ஆணவப் பேச்சுக்கு   முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தலாக  அமைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

By

Published : Mar 24, 2019, 11:58 PM IST

எடப்பாடி பழனிசாமி

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும். 18 தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றிவாகை சூடுவது உறுதியாகி விட்டது என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக அரசால் மக்களுக்கு செய்யும் திட்டங்களை எல்லாம் திமுக அரசு ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குபோய் சேரவிடாமல் தடுக்க முயன்று வருவதாக குற்றம் சாட்டினார். அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர். இந்த தேர்தலில் தர்மம் வெல்ல வேண்டும். வேண்டுமென்றே நமது கூட்டணிகளை திட்டமிட்டு விமர்சனம் செய்து வருகிறார் ஸ்டாலின்.

இந்தத் தேர்தல் மூலமாக இப்படிப்பட்ட ஆணவப் பேச்சு பேசி வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருக்கு சமிட்டியடி கொடுக்கக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும் என சூளுரைத்தார். இதனிடையே, நன்றாக உங்களுக்கு தெரியும் அதிமுக ஆட்சியை கலைக்கவேண்டும் என்பதற்காகவும் அண்ணா திமுகவை உடைப்பதற்காகவே சதி திட்டம் தீட்டி சில துரோகிகள் துரோகம் விளைவித்தனர் அந்த துரோகத்தின் விளைவாக இந்த சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details