கரோனா தொற்று பரவும் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.அரவிந்தன் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.
குறிப்பாக, தற்காலிகமாக இயங்கி வந்த திருமழிசை காய்கறி சந்தைக்கு வரும் நபர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றுவதற்காக ஐஆர்ஜஎஸ் என்ற கருவியை நிறுவி புதுமையான நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்தக் கருவி தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் ஒன்று கூடும் சமயத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பும். இது கரோனா விதிமுறைப் பின்பற்றாத நபர்களைக் கண்காணிக்க பெரிதும் உதவியது.