தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாக்காளர்கள் பதற்றமின்றி வாக்களிக்கும் வகையில், மாதிரி வாக்குச்சாவடி மையம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பொன்னையா திறந்துவைத்தார்.
மாதிரி வாக்குச்சாவடி மையம் திறப்பு
திருவள்ளூர்: வாக்காளர்கள் பதற்றமின்றி வாக்களிக்கும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பொன்னையா இன்று (மார்ச் 6) திறந்துவைத்தார்.
திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா
அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:தேர்தல் விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம்https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/kancheepuram/tn-kpm-1-6-model-polling-elect-chandru-7204951-dot-mp4-1-1/tamil-nadu20190406121902684