திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பொன்னேரி பகுதிகளுக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தரம் குறித்து அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
செங்குன்றத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
திருவள்ளூர்: செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் 16 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் வேன், பஸ் என மொத்தம் 300 வாகனங்கள் உள்ளன. செங்குன்றம் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் சசி தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை நடைபெற்றது. இந்த ஆய்வில், பொன்னேரி கல்வி அலுவலர் சாம்பசிவம், கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், அவசரகால கதவு ஜன்னல்கள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுப்பணி மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பள்ளி துவங்கியதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.