திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் டி.பி. புரம் கூடியம் இருளர் காலனியில் கரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக வருவாய்த் துறை, தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக 39 இருளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் முன்னிலையில், தகுந்த இடைவெளியுடன் வழங்கப்பட்டன.
இருளர் மக்களுக்கு நிவாரணம்: திருவள்ளூர் ஆட்சியர் வழங்கல்!
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டையில் இருளர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகளை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
ஆட்சியர் ரவிக்குமாரிடம் நிவாரண உதவி வழங்கும் காட்சி
முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்து 166 பயனாளிகளுக்கு, அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்புகள், 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை சுவாசக் கருவிகள், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 100 முழு உடல் கவசங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:மணப்பாறையில் 386 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.