திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் கல்யாணசுந்தரம் தெருவில் வசித்து வருபவர்கள் ரம்யா- கார்த்திக் தம்பதி. இவர்கள் இருவருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 40 ஆயிரத்தை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, மணிகண்டன் என்ற இருவர் வாங்கியுள்ளனர். அதில், கணவர் கார்த்திக்கு கோயம்புத்தூரில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் கம்பவுண்டர் வேலையும், மனைவி ரம்யாவுக்கு பொதுப்பணித்துறையில் வேலையும் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்
ஆனால், அவர்கள் வேலை வாங்கி தரமால் இழுத்தடித்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த ரம்யா- கார்த்திக் தம்பதியினர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்தற்கும் தராமல் ஏமாற்றியுள்ளனர்.