திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், கோடிவள்ளி கிராமம் அருகே இரண்டு இருளர் குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்துவருவதாகவும், மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்து வருவதாகவும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, தாசில்தார் உமா ஆகியோர் கோடிவள்ளி கிராமத்திற்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர் சேர்ந்த, கோபி(33), சுமதி(31), சங்கர்(28), தேசம்மா(23), நந்தினி(12), யுவராஜ்(7), ஆனந்த்(5) ஆகிய ஏழு பேரை மீட்டனர்.
பின்னர், அவர்களை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விடுதலை சான்று, அரிசி, பருப்பு, தலா ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி, இருளர்களின் சொந்த ஊரான ராமாபுரம் இருளர் காலனிக்கு அனுப்பி வைத்தனர்.