திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் கிராமம் சடை அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (54). இவர் தனது மகன்கள் கார்த்திக், அன்பு ஆகியோருடன் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அதிகாலை 4 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் மீது தவறி விழுந்து அடிபட்ட ராமகிருஷ்ணன், தண்ணீரில் விழுந்துள்ளார். இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு மகன்கள் கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்தார்.