தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உக்ரைனில் இருந்து வீடு திரும்பிய பொன்னேரி மாணவி - ஆரத்தழுவி வரவேற்ற பெற்றோர் - thiruvallur distirct news

உக்ரைனில் சிக்கி இருந்த பொன்னேரியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நள்ளிரவில் வீடு திரும்பிய நிலையில் அவரை அவரது பெற்றோர் ஆரத்தழுவி வரவேற்றனர்.

ஆரத்தழுவி வரவேற்ற பெற்றோர்
ஆரத்தழுவி வரவேற்ற பெற்றோர்

By

Published : Mar 6, 2022, 4:56 PM IST

திருவள்ளூர் :பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ஜெகன்-நாகஜோதியின் மகளான ரித்திகா, உக்ரைனில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக அங்கு சிக்கி தவித்துள்ளார்.

ஆரத்தழுவி வரவேற்ற பெற்றோர்

இந்நிலையில், மாணவி ரித்திகா, கடந்த 3 நாட்களுக்கு முன் ருமேனியா வந்து அங்கிருந்து நேற்று இந்தியா வந்த அவர் நள்ளிரவில் சென்னை திரும்பினார். இவரை சென்னை விமான நிலையத்தில் அவரது பெற்றோர் வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்த அவரை ஆரத்தி எடுத்தும், இனிப்புகளை வழங்கியும் ஆரத்தழுவியும் பெற்றோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதையும் படிங்க : உக்ரைன் போருக்கு நடுவே பாசப்போர் நடத்தி செல்ல நாயுடன் நாடு திரும்பிய மாணவி!

ABOUT THE AUTHOR

...view details