தமிழ்நாடு

tamil nadu

வீட்டு ஜன்னலில் இருந்த சாவி - சவுகரியமாக திருடிச் சென்ற கும்பல்

திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து 80 சவரன் நகை, ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

By

Published : Apr 11, 2022, 4:37 PM IST

Published : Apr 11, 2022, 4:37 PM IST

திருட்டு நடந்த வீட்டில் சோதனை
திருட்டு நடந்த வீட்டில் சோதனை

திருவள்ளூர்: வேப்பம்பட்டு பிரியா நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருபவர் மனோகரன். இவரது மனைவி மீனா. இவர் நேற்று (ஏப்.10) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை குடும்பத்துடன் சாய்பாபா கோயிலுக்குச் சென்றுவிட்டார்.

மீண்டும் இரவு 11 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 80 சவரன் நகை, ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய் பணம் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரின் அளித்தார்.

புகாரின் பேரில் ஆவடி உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையில் செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் டில்லி பாபு வழக்குப்பதிவு செய்ததார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

திருட்டு நடந்த வீட்டில் சோதனை

தொடர்ந்து காவல் துறை நடத்திய விசாரணையில், குடும்பத்தார் வீட்டின் சாவியை வீட்டு ஜன்னலில் வைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையறிந்தவர்கள் தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் தகராறு: நண்பனை மாடியிலிருந்து தள்ளிவிட்ட 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details