திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் துளசிமணி, பாண்டியன், பாஞ்சாலி, லலிதா, மல்லிகா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில்,"ஊராட்சித் தலைவர் ரமேஷ் ஊராட்சி நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் துணைத் தலைவருடன் இணைந்து முடிவெடுத்து வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் மறைக்கிறார்.
ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள், குழாய்கள் பொருத்தப்பட்டதாக பொய் கணக்கு எழுதி கொள்ளை அடிக்கிறார். எனவே ஊராட்சித் தலைவர் ரமேஷ் மீதும் துணைத் தலைவர் மீதும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சித் தலைவரின் காசோலை அதிகாரத்தை ஒடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஒன்றிய அலுவலர்கள் ஊராட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க:புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.பி. அன்பழகன்