திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதிகளில் ஒரே மருத்துவ ஆதாரமாக திகழ்வது பழவேற்காடு அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனை பிரிவு தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், காட்டுப்பள்ளி எல்என்டி நிறுவனம் ரூபாய் 14 லட்சத்து 24 ஆயிரத்து 300 மதிப்பில் எக்ஸ்ரே பரிசோதனை பிரிவை அமைத்து கொடுத்துள்ளது.
இதற்கான தொடக்கவிழா முதன்மை மருத்துவ அலுவலர் சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஹைட்ரோ கார்பன் திட்டம் நிர்வாகிகள் கலந்துகொண்டு எக்ஸ்ரே பிரிவினை தொடங்கிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி, காதுகேளாதோர் 17 பேருக்கு சுமார் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் திறன் கருவிகள் வழங்கப்பட்டன. இதை மாவட்ட கவுன்சிலர் தேச ராணி தேசப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுமித்ரா குமார், செவ்வாழகி, எர்ணாவூர்ன், நாகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கஜேந்திரன், சம்பத், துணைத் தலைவர் வி.எல்.சி ரவி, பழவேற்காடு இந்தியன் வங்கி மேலாளர் விஜயராஜ் உள்ளிட்டோர் வழங்கினர். இதில் எல்என்டி நிர்வாகிகள், மீனவ கிராம மக்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
என் இசை அறிவுக்கு காரணம் அக்காதான் - யுவன் ஷங்கர் ராஜா