தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையை சீரமைக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் புதியதாக போடப்பட்ட சாலை சிதலமடைந்ததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

By

Published : Nov 19, 2019, 2:38 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் தேர்வழி ஊராட்சியில் தொடங்கி, நத்தம் ஊராட்சி வழியாக மேலக்காலனி ஊராட்சி வரை சுமார் மூன்று கிலோமீட்டர் சாலையை தார்சாலையாக மாற்ற 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதத்திற்கு முன் தார்சாலை போடப்பட்டது.

சுமார் ஐந்து ஆண்டுகள் தாங்ககூடிய இந்த சாலையானது இரண்டு மாதமே ஆகியுள்ள நிலையில் சாலை சிதைந்துள்ளது.

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இந்த சாலையை தரமாக போடாமல், அரசு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்த சாலை ஒப்பந்ததாரர்கள், அதற்கு துணையாக இருந்த அரசு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நத்தம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கும்மிடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடிய விரைவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க : ஏரியைக் காணல சார்... கலெக்டரிடம் புகாரளித்த பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details