திருவள்ளூர்:திருப்பாச்சூர் ஊராட்சி கொசவன்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சுமார் 10 அடிக்கும் மேல் ஆழம் உள்ள வறண்ட குழியில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு உள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த குழிக்குள் பச்சிளம் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லோகநாதனுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
அதன் பின் கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சுமார் 10 அடி ஆழத்திற்கு மேல் உள்ள வறண்ட குழியில் இருந்து தொப்புள் கொடியுடன் முகத்தில் சிறு சிறு ரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு உள்ளனர். பின், அந்த குழந்தையை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த குழந்தை யாருடையது என்பது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் சங்கர் உயிரிழந்து உள்ளார்.