தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2023, 9:31 AM IST

ETV Bharat / state

300 டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை நிறுத்தம்.. பின்னணி என்ன?

கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள வாடகை தொகையினை டாஸ்மாக் நிர்வாகம் வழங்காததால், மதுபானம் விநியோகம் செய்யும் டிரான்ஸ்போர்ட் நிர்வாகம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான சப்ளை நிறுத்தப்பட்டது.

300 டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை நிறுத்தம்
300 டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை நிறுத்தம்

300 டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை நிறுத்தம்

திருவள்ளூர்:திருமழிசை சிப்காட் பகுதியில் திருவள்ளூர் கிழக்கு, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மொத்த டாஸ்மாக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனை, அரசு மதுபான கடைகள், மற்றும் 120 நட்சத்திர ஹோட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்களுக்கும் லாரிகள் மூலம் மதுபானம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுபானங்கள் கொண்டு செல்லும் லாரி டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்திற்குக் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக டாஸ்மார்க் நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. போக்குவரத்து மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் ரூ.4.75 கோடி நிலுவையில் வைத்துள்ளதாகவும் அது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் இன்று வரை பேச்சுவார்த்தை நடத்தாமல் அலைக்கழிப்பதாகவும் கூறி, திருமழிசை அரசு மதுபானக் கிடங்கில் 60க்கும் மேற்பட்ட மதுபானங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளை நிறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்குப் போடப்பட்ட ட்ரான்ஸ்போர்ட் ஒப்பந்தம் முடிந்தும், தாங்கள் வாகனங்களை இயக்கி வருவதாகவும், மறு ஒப்பந்தம் போடுவதற்கு டெண்டர் விடப்பட்டும் ஒப்பந்தப்புள்ளியை பாக்சில் போடுவதற்கு யாரையும் அனுமதிக்காததாலும், இ டெண்டர் முறையை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதனால் திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மற்றும் 120 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மதுபானங்கள் வினியோகமானது நிறுத்தப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் டாஸ்மார்க் நிறுவன அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டமானது நடைபெற்றது.

இதையும் படிங்க: பெண் தோழியுடன் விடுதியில் உல்லாசம்.. ஆண் நண்பர் மரணத்தில் திடீர் திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details