திருவள்ளூர்:பழவேற்காட்டைச் சேர்ந்தவர் ஷாஜஹான் (65). பஜார் பகுதியில் பஞ்சர் கடை நடத்திவந்தார். இவர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவதாக, திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் மஹிதாவுக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஷாஜஹான் வீட்டில் காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது இரண்டு பேரல்கள், இரண்டு பானைகளில் சாராய ஊறல் இருப்பது தெரியவந்தது.