திருவள்ளூர் அடுத்த மேல்நிலையில் எச்.எம்.எப்.சி.எல் எனப்படும் கார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் விற்றுவிட்டதால் நிரந்தர பணியாளர்களாக உள்ள அலுவலக ஊழியர்களை முதல் கட்டமாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலையின் 76 சதவீத பங்குகளை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு அண்மையில் விற்பனை செய்த போதிலும், மீதமுள்ள 24 சதவீத பங்குகளை அந்நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிலையில் பணியாளர்களுக்கு பணிமாற்றம் செய்து தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில், நிரந்தரப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து விலக வேண்டுமென தொழிற்சாலை நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.