ஆவடி பருத்திப்பட்டு அருகே உள்ள மைதானத்தில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ்,விஷால் ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது அந்தப் பகுதியில் திருவேற்காட்டை சேர்ந்த நாகராஜ், பரத், விஜய் ஆகிய மூவரும் ராஜேஷ் பெயரை வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கஞ்சா விவகாரத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு!
திருவள்ளுர்: ஆவடியில் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ராஜேஷ்,விஷால் இருவரும் எனது பெயரை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்யக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளாள் அவர்க்ள் இருவரையும் கழுத்து, கைகளில் வெட்டி விட்டு தப்பி ஓடிச் சென்றனர். இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் ஓடிவந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.