தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவுடன் கூட்டணிக்கு தயாராகிறாரா பிரேமலதா: பரபரப்பாகும் அரசியல் களம்!

திருவள்ளூர்: சசிக்கலாவால் பலன் பெற்றவர்கள் அதிகம் எனவும், அவர் விடுதலையாகி வந்து தமிழ்நாட்டு அரசியலில் பங்கு பெற வேண்டும் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா
பிரேமலதா

By

Published : Jan 24, 2021, 11:42 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் தேமுதிக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் தொகுதிகளுக்கு உட்பட்ட பொது உறுப்பினர்கள், பூத் முகவர்கள், செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பூத் முகவர்கள் பட்டியல் அளிக்கப்பட்டது. பின்னர், மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்து சிறப்புறை ஆற்றினார்.

அவர் பேசுகையில், "நாளைக்கு தேர்தல் வைத்தாலும் தயாராக உள்ளோம். கூட்டணி உண்டா இல்லையா என்பதை தலைவர் முடிவு எடுப்பார். கூட்டணியில் இருப்பதால் பொறுமை காத்து கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல்
திமுக, அதிமுகவிற்கே முதல் தேர்தல்.

இதனால் யாரும் பெரிய ஆள் என நினைக்க வேண்டாம். எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தல் கணிப்பு கூறுகிறது. தேமுதிக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவையில் எனது குரல் ஒலிக்க வேண்டும் என்று இருந்தால் யாராலும் அதனை தடுக்க முடியாது. விஜயகாந்த் அனுமதி கொடுத்து ஆண்டவன் அருள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்று தெரியாது.

ஒரு பெண் என்ற முறையில் ஒரு பெண்ணாக சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா. அவருக்கென்று தனி வாழ்க்கை கிடையாது,. அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது. அவர் விடுதலையாகி வந்து தமிழ்நாட்டு அரசியலில் பங்கு பெற வேண்டும். ஒரு பெண்ணாக அதற்கு முழு ஆதரவு தருகிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details