தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் 2ஆவது மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

திருவள்ளூர்: முதல் மனைவியுடனான உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட தகராறில் 2ஆவது மனைவியை இரும்பு பைப்பால் அடித்துக் கொன்ற கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

கணவன் கைது
கணவன் கைது

By

Published : Jan 23, 2021, 11:18 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மேல்பாக்கம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரிதா (35). இவரது முதல் கணவர் சுரேஷ். இவர்களுக்கு செர்மிலி (7) என்ற மகள் உள்ளார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சரிதாவிற்கு மதன் (42) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருக்கு அலமேலு என்ற மனைவியும், மகன், மகள் என 2 பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதன், சரிதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் மேல்பாக்கத்தில் வசித்து வந்தனர். சரிதாவுடன் அவரது மகள் செர்மிலியும் வசித்து வந்தார். மேலும் சரிதா - மதனுக்கு பெண் குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு முன்பு சரிதா பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்த பிறகு, சரிதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என மதன் கூறிவிட்டார். இருந்த போதிலும் மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் சரிதா தகராறு செய்து வந்தார். இதற்கிடையில் மதனுடன் அவரது முதல் மனைவி அலமேலுவின் மகள் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்தார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்தது.

இதையடுத்து, முதல் மனைவி, குழந்தைகளிடம் பேசக்கூடாது என மதனிடம் சரிதா கூறியதாக தெரிகிறது. இப்பிரச்சினை இருவருக்கும் இடையே கடந்த இரு தினங்களாக நடந்தது. இந்நிலையில், மீண்டும் மதன், சரிதா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மதன், வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சரிதாவின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில், சம்பவ இடத்திலேயே சரிதா ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

தனது கண்முன் தாய் அடித்துக்கொலை செய்யப்பட்டதை பார்த்த, செர்மிலி அதிர்ச்சி அடைத்து கதறி அழுதார். இதன்பிறகு மதன், தனக்கு பிறந்த குழந்தையுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆவடி காவல் துறையினர் விரைந்து வந்தனர்.

பின்னர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த மதனை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தலையில் கல்லை போட்டு மனைவி கொலை: மதுரையில் கணவன் வெறிச்செயல்!

ABOUT THE AUTHOR

...view details