திருவள்ளூர்: தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி - திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி; திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை...
இந்நிலையில் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு, திருவாலங்காடு, பூண்டி, மணவாளநகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் வாகன ஓட்டிகளுக்கு இருள் சூழ்ந்த மேகத்தின் காரணமாக தடுமாற்றம் ஏற்பட்டு மெதுவாக செல்கின்றனர்.
இதையும் படிங்க:தெரு நாய்களை தாக்கியதை கண்டித்த காவலரை கட்டையால் அடித்த 5 பேர் கைது