தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடுகுடுப்பைக்காரர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது

திருவள்ளூர்: புட்லூர் கிராமத்தில் உள்ள குடுகுடுப்பைக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

By

Published : Apr 24, 2020, 11:34 PM IST

குடுகுடுப்பைக்கார குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்
குடுகுடுப்பைக்கார குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் திருவள்ளூரை அடுத்த புட்லூர் ஊராட்சியில் வசிக்கும் குடுகுடுப்பைக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், பழங்குடியினர், இருளர்கள் என 156 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரிசி மளிகை பொருள்கள், காய்கறிகள், முகக் கவசம் ஆகியவற்றை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா. தாஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அந்த கூட்டணியின் துணை செயலாளர் விஜயகுமார், புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன், துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பொருள்கள் வழங்கும்போது "நல்லகாலம் பொறக்குது.. நல்லகாலம் பொறக்குது... கரோனாவை ஒழிக்க விரைவில் நல்ல காலம் பிறக்கப் போகுது"... என குடுகுடுப்பைக்காரர்கள் பாட்டு பாடினார்கள்.

இதையும் படிங்க: கேரளாவில் ‘கூடே’ என்ற மருத்துவ சேவை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details