தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி: ஆக்ஸிஜன் நிரப்பும் பணிகள் விரைவில் தொடக்கம்

திருவள்ளூர்: சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 244 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டுக்கு வந்தடைந்தன. அங்கு வைத்து ஆக்ஸிஜன் நிரப்பும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Oxygen
Oxygen

By

Published : May 14, 2021, 9:05 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் ஆக்ஸிஜன் தேவையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க தமிழ்நாடு அரசு சிங்கப்பூரில் இருந்து 244 காலி சிலிண்டர்களை இறக்குமதி செய்தது.

விமானம் மூலம் சென்னை வந்த காலி சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்புவதற்காக லாரிகள் மூலமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சிப்காட் வளாகத்தில் நான்கு தொழிற்சாலைகள் ஏற்கனவே மருத்துவ ஆக்ஸிஜன் தயாரித்து விநியோகம் செய்து வருவதால் இந்த காலி சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்புவதற்கான பணிகள் குறித்து சிப்காட் நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details