தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 11 பெண்கள் படுகாயம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பிரபல தனியார் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பெண்கள் படுகாயமடைந்தனர்.

வேலையாள்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
வேலையாள்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

By

Published : Dec 4, 2020, 12:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சிப்காட்டில் பிரபல தனியார் காலணி உற்பத்தி தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம், பல்வாடா, மாநல்லூர் போன்ற பகுதிகளிலிருந்து பெண் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் பெண் பணியாளர்களை ஏற்றிவந்த வேன், சாலையைக் கடக்க முயன்ற மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு, லேசான காயங்களுடன் இருந்த மூன்று பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீதமுள்ள எட்டு பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அயனாவரத்திலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மினி லாரி!

ABOUT THE AUTHOR

...view details