தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசியக்கொடியுடன் பால் பாக்கெட் ஆவினில் விநியோகிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் தகவல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி சின்னத்துடன் பால் பாக்கெட் அச்சடிக்கப்பட்டு விரைவில் ஆவினில் விநியோகிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்

Etv Bharatஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசிய கொடி  பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர்
Etv Bharatஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசிய கொடி பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர்

By

Published : Aug 12, 2022, 8:13 PM IST

திருவள்ளூர்:சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி சின்னத்துடன் பால் பாக்கெட் அச்சடிக்கப்பட்டு விரைவில் ஆவினில் விநியோகிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனியார் நிறுவன பால் விலை உயர்வை அரசு நெறிப்படுத்தவில்லை என பால் முகவர் பொன்னுசாமியின் கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’பொன்னுசாமி சங்கத் தலைவரே கிடையாது. அவர் கேள்வி கேட்கவே தகுதி இல்லை. அவர் தான் ரவுடி என சொல்வது போல் அவர் தலைவரென சொல்லி வருகிறார். தமிழ்நாட்டில் நோட்டாவுக்கு குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவுக்கும் அதன் தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது. அண்ணாமலையாவது உண்ணாமலையாவது’ என அவர் விமர்சனம் செய்தார்.

’கடந்த 10 ஆண்டுகள் போதைப்பொருள்களைத்தடுக்காமல் அதிமுக அரசு தவறிவிட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு பலவிதமான இனிப்புகள் ஆவினில் தயாரிக்கப்படும். மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி சின்னத்தில் ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட் அச்சடிக்கப்பட்டு விரைவில் விநியோகிக்கப்படும். பால் விலை ரூ.3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. பால் விலை குறைவால் ஒரு நாளைக்கு 85 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது’ என அவர் கூறினார்.

தேசியக்கொடியுடன் பால் பாக்கெட் ஆவினில் விநியோகிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் தகவல்

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தனியார் நிறுவன பாலின் விலை உயர்வு

ABOUT THE AUTHOR

...view details