திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பனப்பாக்கத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் சூர பாக்கம் கிராமத்தில் வாட்டர் மிஷின் திட்டத்தின் கீழ் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடிமராமத்து பணிகள் மக்கள் இயக்கமாக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
திருவள்ளூர்: குடிமராமத்து பணிகள் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு நீர்நிலைகள் தூர்வாரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதன்பின் பேசிய அவர், வறட்சியான காலகட்டத்திலேயே நீராதாரங்களை சீரமைத்து மழை நீரை சேமிக்க இது போன்ற குடிமராமத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ள இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது. இந்த குடிமராமத்து பணிகள் மூலம் மக்கள் இயக்கமாக இது மாற்றப்பட்டு வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கப்படும்.
மழைநீரை சேமிக்க ரூ. 199.99 கோடி மதிப்பில் 1,829 ஏரி பணிகள் விவசாயிகள் துணையோடு நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.1,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடல் முகத்துவாரம் இணையும் பகுதி வரை கழிவுகள் கலக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் அருகே 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.