தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துவ பெண்கள் புனித பயணம் செல்ல ஏற்பாடு - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கிறிஸ்துவ பெண்களும் புனித பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 10, 2021, 9:45 AM IST

minister masthan
அமைச்சர் செஞ்சி மஸ்தான்

திருவள்ளூர் ஷாலோம் கிறிஸ்தவ பேராலயத்தில் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு தொடக்க விழா நடந்தது. இதில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மைக்கேல் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிறுவனர் லியோ நெல்சன், மாநில நிர்வாகி பாஸ்டர் சுரேஷ் ஜோஸ்வா, ரூவா ஊழியங்களின் நிறுவனர் ஆல்வின் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

நிகழ்ச்சியில் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், ’’சிறுபான்மையினருக்குத் தேவையான அனைத்துச் சலுகைகளையும் மக்களுக்கு நேரடியாக கொண்டுசேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படும். கிறிஸ்துவ பெண்களும் புனித பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும்” என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details