தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மளிகை கடையில் போதைப்பொருள்கள் சப்ளை: சகோதரர்கள் கைது!

திருவள்ளூர்: மளிகை கடையில் பதுக்கி வைத்து போதைப்பொருள்கள் விற்ற சகோதரர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மளிகை கடையில் போதைப்பொருள்கள் சப்ளை
மளிகை கடையில் போதைப்பொருள்கள் சப்ளை

By

Published : Dec 30, 2020, 7:13 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பட்டறை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலின் அடிப்படையில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன் தலைமையில் மணவாள நகர் காவல் ஆய்வாளர் கண்ணையன், உதவி ஆய்வாளர்கள் மகேஷ், ரவி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சங்கர், சாரதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

ரூ.5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்:

விசாரணையில், அப்பகுதியிலுள்ள எஸ்ஆர் & சன்ஸ் மளிகை கடையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிலோ போதைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, போதைப் பொருள்களை விற்பனை செய்த மணவாள நகர் பட்டறை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய மகன்கள் சுயம்புலிங்கம், ராஜா ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட சகோதரர்களிடம் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்: மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details