திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பொன்ராஜ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பின்னர், பொன்ராஜ் அன்றிலிருந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு பொன்ராஜ் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பொன்ராஜ், திருவள்ளூரை அடுத்த புட்லூர் ரயில் நிலையம் அருகே தலைமறைவாகியிருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர்.