தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்க்கஸ் கூடாரத்தில் உணவின்றி தவிக்கும் மிருகங்கள்!

திருவள்ளூர்: ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் சர்க்கஸ் கூடாரத்தில் உணவின்றி தவித்த மிருகங்களுக்கு உணவளித்து உதவியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Animals
Animals

By

Published : Apr 9, 2020, 5:12 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு திருவள்ளுர் நகரில் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்க்கஸ் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கூடாரம் பூட்டப்பட்டது. அதனால், அங்கிருக்கும் ஒட்டகம், குதிரை, யானை உள்ளிட்ட மிருகங்கள் உணவில்லாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்க்கஸ் கூடாரத்தில் உணவின்றி தவிக்கும் மிருகங்கள்

இதை அறிந்த டிவைன் லைட் டிரஸ்டின் நிறுவனர், திருவள்ளூர் நகர ஆய்வாளர் ரவிக்குமார், எஸ் சக்திவேல் ஆகியோர் மிருகங்களுக்கு உணவளித்தனர். தொடர்ந்து, சர்க்கஸ் கூடாரத்தில் தங்கியிருக்கும் நபர்களுக்கும் உணவளிப்போம் என உறுதியளித்தனர்.

இதையும் படிங்க:கோவிட்19: உங்கள் செல்லப்பிராணி எவ்வளவு பாதுகாப்பானது?

ABOUT THE AUTHOR

...view details