தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம்': கலை நிகழ்ச்சியுடன் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர்: கலை நிகழ்ச்சிகளுடன் 'பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம்' என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவரும் மாவட்ட ஆட்சியருமான பொன்னையா பொதுமக்களிடம் வழங்கினார்.

By

Published : Mar 17, 2021, 5:13 PM IST

awareness
awareness

திருவள்ளூரில் பொதுமக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிராமியக் கலைகளான மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியுடன் 'பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம்' என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா, பூவிருந்தவல்லி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியருமான பிரீத்தி பார்கவி ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கினர்.

அப்போது 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்தும் வலியுறுத்தினர். கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கலை நிகழ்ச்சியுடன் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

இதையும் படிங்க: தர்மபுரியில் நாட்டுப்புறக் கலைகள் மூலம் வாக்காளா் விழிப்புணர்வு பேரணி!

ABOUT THE AUTHOR

...view details