தமிழ்நாடு

tamil nadu

திருநெல்வேலியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

By

Published : Nov 16, 2020, 5:15 PM IST

திருநெல்வேலி: வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார். மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 வாக்காளர்கள் உள்ளனர்.

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் சேர்த்தல், இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு அந்த ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.16) வெளியிடப்பட்டது. திருநெல்வேலியில் வரைவு வாக்காளர் பட்டியலை புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.

அதில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் 13 லட்சத்து 30 ஆயிரத்து 118 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு நடைபெற்ற பெயர் சேர்த்தல் உள்ளிட்ட மாற்றத்திற்குப் பிறகு 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 வாக்களர்கள் உள்ளனர். மொத்தம் 18 ஆயிரத்து 364 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 71 ஆயிரத்து 719 என உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்ததாவது, "மாவட்டத்தில் இன்று வெளியிட்ட பட்டியலில் மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 வாக்காளர்கள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து களத்தில் ஆய்வு செய்ய உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: தர்மபுரி வாக்காளர் பட்டியல் - மொத்தம் 12 லட்சத்து 35 ஆயிரத்து 534 வாக்காளர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details