திருநெல்வேலி:இரவு நேர ஊரடங்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதால் திருச்செந்தூர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடந்துசெல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கரோனா விதிமுறைகளை மீறிய காரணத்துக்காகக் கடந்த ஒரு வாரத்தில் 5000 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கரோனா மூன்றாம் அலை, ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மேலும் நாளை முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்குத் தடைவிதிக்கப்பட்ட உத்தரவும் நடைமுறைக்குவருகிறது. இந்த நிலையில், நெல்லை மாநகரில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இன்றுமுதல் கரோனா பரவல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதையொட்டி உணவகங்கள், திரையரங்குகள், பிற வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மருந்துக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதற்காக மருந்துச் சீட்டுகளைக் காட்டி தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் நடவடிக்கை