தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2020, 5:10 PM IST

ETV Bharat / state

நெல்லையில் அரசு விதிகளுடன் டாஸ்மாக் திறப்பு!

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் அனைத்துப் பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.

நெல்லையில் அரசு விதிகளுடன் டாஸ்மாக் திறப்பு
நெல்லையில் அரசு விதிகளுடன் டாஸ்மாக் திறப்பு


கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 40 நாள்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது மதுபானக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வட்டம் வரையப்பட்டது.

இந்நிலையில் இன்று நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை காலை10 மணிக்கு முன்னரே வரிசையில் நிற்கத் தொடங்கினர். மேலும் மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன் அவர்களின் ஆதார் எண்களை குறித்து வைத்த பின்னரே மது விற்பனை செய்யப்பட்டது.

மிகுந்த சிரமத்திற்கு பின் மதுபானம் கிடைத்த மகிழ்ச்சியில் மதுப் பிரியர்கள் கூறுகையில், இந்த 40 நாள்கள் மது கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு மனவருத்தத்தில் இருந்ததாகவும், ஒரு வழியாக மதுவை விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இப்போது மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் மீண்டும் குடிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தடைகளைத் தாண்டி மதுவாங்குவது எப்படி? குடிமகனின் ஒத்திகை வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details