தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் பொங்கல் பரிசுடன் ஓட்டம் பிடித்த ரேஷன் கடை ஊழியர்!

நெல்லையில் பொங்கல் பரிசு பணம் மற்றும் இயந்திரத்துடன் ரேஷன் கடை ஊழியர் தப்பி சென்றதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Jan 7, 2021, 2:15 PM IST

Published : Jan 7, 2021, 2:15 PM IST

பொங்கல் பரிசுடன் ஓட்டம் பிடித்த ரேஷன் கடை ஊழியர்
பொங்கல் பரிசுடன் ஓட்டம் பிடித்த ரேஷன் கடை ஊழியர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மேலூர் ராஜா குடியிருப்பு பகுதியில் உள்ள அமுதம் நியாய விலைக் கடையில்( கடை எண் 6ஏ) சுமார் 1000 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருள் வாங்கி வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 4ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ரேஷன் கடை எழுத்தர் சிவராமன் சரிவர பொங்கல் பரிசு தொகையான ரூ.2500ஐ பொதுமக்களுக்கு வழங்காமல் இழுத்தடித்துவந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று (ஜன.06) மற்றும் நேற்று முன்தினம் (ஜன.05) உரிய முறையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் பொதுமக்கள் அலுவலர்களிடம் புகார் அளித்தனர்.

பொங்கல் பரிசுடன் ஓட்டம் பிடித்த ரேஷன் கடை ஊழியர்

இதையடுத்து சிவராமனை நுகர்பொருள் வாணிப கழக நெல்லை மண்டல மேலாளர் ராஜா, சிவராமனை நேற்று (ஜன.06) சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் இன்று (ஜன.07) ஊழியர் சிவராமன் ரேஷன் கடைக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளே இருந்த பயோமெட்ரிக் இயந்திரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பணத்தையும் எடுத்துச்சென்று அங்கிருந்து திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இன்று பொங்கல் பரிசு வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்ததோடு, கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ரேஷன் கடைக்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது சிவராமன் அத்துமீறி இயந்திரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் சிவராமன் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர். மேலும் மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பொங்கல் பரிசு கிடைக்கும்வரை கடையை விட்டு நகர மாட்டோம் என அங்கேயே மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், ’ஊழியர் சிவராமன் நேற்று முன்தினம் (ஜன.05) பயோமெட்ரிக் இயந்திரத்தை தவறுதலாக கையாண்டுள்ளார். அதாவது பணம் மற்றும் பொருட்கள் வழங்காமலேயே வழங்கிவிட்டதாக கூறி இயந்திரத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, இதுபோன்று நடந்ததாக தெரிகிறது. இருப்பினும் அவரிடம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பணம் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘கோயில் பணியாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்’- இந்து அறநிலையத் துறை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details